Tamilnadu
இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை? : வானிலை ஆய்வு மையம் சொன்ன அப்டேட் என்ன?
தமிழ்நாட்டில் நேற்று இரவில் இருந்து பரவலாக கன மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,” இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
இதனால், தமிழ்நாடில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் காண முதல் மிக கனமழையும் நெல்லை தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்கள் ஒரு இடங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடாவில் லட்சத்தீவு பகுதிகளில் பலத்தகாற்றானது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குள் செல்ல வேண்டாம் .
காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மழை விட்டுவிட்டு பெய்கிறது மன்னார்வளைகுடா பகுதியில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த பகுதியானது மெல்ல மெல்ல நகர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது மழையின் தாக்கமானது தென் மாவட்டங்களில் இருக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்யும் தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்படுகிறது.
அதேபோல் டிச.15 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் நகர்வுகள் குறித்து பிறகு அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!