Tamilnadu
”தமிழ்நாட்டில் கோயில் யானைகள் நலமுடன் உள்ளன” : சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (டிச.09) தொடங்கிய நிலையில், முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கேள்வி - பதில் நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதையடுத்து மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய அரசுக்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று (டிச.10) இரண்டாம் நாள் கூட்டத்தொடர் பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி - பதில் நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசினார்.
அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு,” 26 திருக்கோவிலில் இருக்கின்ற 28 யானைகளுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் குளியல் தொட்டிகள் கட்டிகொடுக்கப்பட்டது. 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், 3 மாதத்திற்கு ஒரு முறை யானைகளின் உடல்நிலையை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் இருக்கின்ற பார்வதி யானைக்கு கண்ணீல் பாதிப்பு ஏற்பட்டபோது, டென்மார்க்கில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை கொடுத்து, யானையின் உயிரை காப்பாற்றி பார்வை தந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான்.
கோயில் யானைகளின் உடல்நிலை குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்புவதற்கு இந்த அரசு தயாராக இருக்கின்றது. யானைகளுக்கு தேவைப்பட்டால் உயர் சிகிச்சை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !