Tamilnadu
”பிரதமர் மோடியை இதுவரை நாடாளுமன்றத்தில் பார்க்கவில்லை” : பிரியங்கா காந்தி MP குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ஒருநாள் கூட அவை முழுமையாக நடைபெறவில்லை.
இந்தியா கூட்டணி கட்சிகள் மணிப்பூர் வன்முறை, அதானி ஊழல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கை மீது விவாதம் நடத்த மறுத்து ஒன்றிய பா.ஜ.க அரசு அவையை தினமும் ஒத்திவைத்து வருகிறது.
மேலும் அவை ஒத்திவைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள்தான காரணம் என பழிசுமத்தி வருகிறது. இது ஒருபுறம் என்றால், பிரதமர் மோடி அவைக்கே வராமல் இப்பிரச்சனைகளை வேடிக்கைப்பார்த்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவையில் ஆக்கப்பூர்வான விவாதங்கள், கேள்விகள் வரும்போதும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் இருக்கமாட்டார். தற்போது மூன்றாவத முறையாக பிரதமாரக வந்தபிறகும் இதேவேலையைதான் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ள பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை நான் அவையில் பார்க்கவே இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கூறிய பிரியங்கா காந்தி,”அதானி விவகாரத்தை முன்மொழிந்தாலே, ஒன்றிய பா.ஜ.க அரசு அச்சப்படுகிறது. நான் நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினராக பதவியேற்றது முதல், இதுவரை பிரதமர் மோடியை அவையில் பார்க்கவில்லை. இதை ஏன் நாங்கள் சிக்கலாக எழுப்பக்கூடாது?.” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!