Tamilnadu
சென்னையில் நடுரோட்டில் காதலியுடன் பைக் சாகசம் : கார் ஓட்டுநராக பணிபுரியும் வாலிபர் அதிரடி கைது !
சென்னை அண்ணாநகர் பகுதியில் இரவு நேரத்தில் காதலியுடன் வாலிபர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை அடுத்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் பைக் சாகச வீடியோவின் அடிப்படையில் வாகன பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பைக் சாகசத்தில் காதலியுடன் வீலிங் செய்தவாறு செல்வதைப் போன்று வீடியோ பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரியக்கூடிய ராஜ்குமார் என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவரை அண்ணாநகர் போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ராஜ்குமார் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னதாக அண்ணா நகர் பகுதியில் வீடியோவை எடுத்ததாகவும் அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருப்பினும் பொதுஇடத்தில் இவ்வாறு சாகசம் மேற்கொண்டதால் அவரை அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் வேறு பொது இடங்களில் இவ்வாறு சாகசம் ராஜ்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!