Tamilnadu
“தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியால் மின் நுகர்வு 8.5% அதிகரித்துள்ளது!” : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!
கரூர் மாவட்டத்தில் "யங் இந்தியா" ( இளையயோர் இந்தியா) அமைப்பின் நான்காவது ஆண்டு விழா நேற்று (டிசம்பர் 7) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாமேடையில் அவர் பேசியதாவது, “ தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்ற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, காலை உணவு திட்டம் வெளிநாடுகளில் கூட செயல்படுத்தப்படுகிறது.
மின்சார துறை வாயிலாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 393 துணை மின் நிலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சில பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல இலக்கை நிர்ணயித்து திராவிட மாடல் முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்திய அளவில் சராசரியாக ஆண்டுக்கு 5.7% மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8.5%ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம், பிற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிக அளவில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
மின் நுகர்வு அதிகரிப்பு காரணத்தால் 5 ஆண்டுகளில் 50% மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். இதற்காக தற்போது கூடுதல் மின்சார உற்பத்திக்கான சிறப்பு திட்டங்களை வகுத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!