Tamilnadu
“சினிமா செய்தியலாம் நான் பாக்குறது இல்ல...” - விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி!
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு உழைத்து வருகிறது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்த பிரச்னைகளை சரி செய்து, மக்களாட்சியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறது.
பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், திருநங்கைகள், விவசாயிகள், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அனைவருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் மனதில் மேலும் சிறப்பு அந்தஸ்தை பெற்று வருகிறது. இருப்பினும் எதாவது குறை சொல்ல வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வதந்தி பரப்ப முயன்று வருகின்றனர். அதையெல்லாம் முறியடித்து முன்னோக்கி செல்கிறது இந்த திராவிட மாடல் அரசு.
அந்த வகையில் புதிதாக அரசியல் கட்சித் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், வழக்கம்போல் தமிழ்நாட்டில் திமுக அரசை விமர்சித்தால்தான் பிழைக்க முடியும் என்ற கணக்கில், வேண்டுமென்றே குறை கூறி வருகிறார். மேலும் "மக்களுக்காக மக்களுக்காக" என்று கூறி, மக்களுக்காக களத்தில் இல்லாமல், சினிமா ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார்.
அண்மையில் ஏற்பட்ட ஃபெங்கல் புயல் பாதிப்பின்போதும் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். இதைத்தொடர்ந்து ஷூட்டிங் முடித்து திரும்பிய அவர், மழை - வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆராயாமல், மக்களுக்கு நேரில் சென்று உதவாமல், பனையூரில் தனது அலுவலகத்துக்கு, பேருக்கு என்று சிலரை வரவழைத்து நிவாரண உதவிகள் வழங்குகிறோம் என்று பெயரில் வழங்கினார் நடிகர் விஜய்.
இப்படிபட்ட ஒருவர் பேசுவதற்கு தகுதி இல்லாத ஒருவர் திமுக அரசை பற்றி மேலும் தற்போது குறை கூறி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதாவது நேற்று (டிச.06) அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், திமுக மீதும், திமுக அரசு மீதும் வீணாக பழி சுமத்தினார். இதற்கு தற்போது இதற்கு திமுகவினர், அமைச்சர்கள் என பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் காலையில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், "தமிழக அரசியலைப் பற்றி தெரியாத சிலர் திமுக குறித்து பேசுகிறார்கள். களத்திற்கே வராத சில தற்குறி, திமுகவின் 200 தொகுதி வெற்றி இலக்கு குறித்து விமர்சிப்பதா? திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. இதில் குறைவு ஏற்படும் என்று நினைப்பவர்களின் கனவு பகல் கனவாகவே முடியும். எங்களின் நிலைப்பாடு 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது அல்ல, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு." என்று பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இதற்கு பதிலளித்த அவர், “நான் சினிமா செய்தியலாம் பாக்குறது இல்ல...” என்று கிண்டலாக பதிலடி கொடுத்தார்.
மேலும் மன்னராட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, “முதலமைச்சர்களை மக்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அறிவுகூட இல்லையா?” என்று பதிலடி கொடுத்தார்.
Also Read
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!