Tamilnadu
புரசைவாக்கம் - கெல்லீஸ் இடையே மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடமும் ஒன்று. 45.4 கி.மீ. தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை மற்றும் பசுமை வழிச்சாலை உட்பட பல்வேறு பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் அடுத்தடுத்து தொடங்கி நடைபெறுகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 3 வழித்தடங்களில் பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. சுரங்கப்பாதை பணிக்காக, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது வரை 18 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக புரசைவாக்கம் - கெல்லீஸ் நோக்கி சுரங்கப்பாதை அடிப்படை பணிகள் முடிந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு துளையிட வேண்டும்.
மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அயனாவரத்தில் இருந்து ஓட்டேரி வரையிலான 925 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!