Tamilnadu
“எங்களையும் சங்கியாக்க முயல்கிறார் சீமான்” - நெல்லை மாவட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
தமிழ்நாட்டில் ஒரு முக்கிய கட்சியாக நாம் தமிழர் கட்சியை ஒரு சிலர் பார்த்தாலும், சீமானால் அது மேலும் பாழாகி வருகிறது. சீமான் தனது நாவை கட்டுப்படுத்தாமல் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், அக்கட்சியின் கொள்கையை மீறியும் செயல்பட்டு வருகிறார். இதுவும் போக வாயை திறந்தாலே பொய் என்று பலரும் விமர்சித்தும் வருகின்றனர். இதற்கு அக்கட்சியினரே பலரும் சீமானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக அக்கட்சியினருக்கும் சீமான் உரிய மரியாதையை கொடுப்பதில்லை. இப்படி பல விஷயங்களை முன்வைத்து அக்கட்சியினரே குற்றம்சாட்டி வரும் நிலையில், கிருஷ்ணகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ள நாதக-வும் கலைக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் சீமான், சாட்டை துரைமுருகன் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கட்சியில் இருந்து விலகுவதாக கூறி பலர் வெளியேறினர்.
இந்த நிலையில் நேற்று (நவ.30) அக்கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வின் செய்தியாளர்களிடம் பேசியது வருமாறு :
“சீமான் புரட்சியாக பேசுவார். ஆனால் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். நம் முன்பு யாரும் எம்.எல்.ஏ. ஆகி விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார். சீமானுக்கு தனது கொள்கையில் பிடித்தம் இல்லை.
நாம் தமிழர் கட்சியில் அடிமையாக இருக்க வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்திலும் வேலையையும் விட்டுவிட்டு கட்சிக்காக உழைக்கிறோம். ஆனால் அதற்கான அங்கீகாரம் நாம் தமிழர் கட்சியில் கிடைக்கவில்லை. நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதை தெரிந்து கொண்டு கட்சியிலிருந்து வெளியேறுகிறோம்.
சீமானின் ஆவேச பேச்சை நம்பி எங்களை போன்ற இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வந்து தூண்டிலில் சிக்கிய புழுவாக மாட்டிக்கொள்ளாதீர்கள், சீமான் உளவியல் ரீதியிலான டார்ச்சரில் இருக்கிறார். நாங்கள் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. நாம் தமிழர் கட்சியே Sleeping Mode-ற்கு சென்றுவிட்டது. சீமான் பதட்டத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினியை எதிர்க்கிறார்; ஆனால் அவரை போய் சீமான் சந்திக்கிறார்.
சங்கி என்றால் சக தோழன் என சீமான் பதிலளிக்கிறார். சங்கி என்றால் சக நண்பன் என்று சொல்லி எங்களையும் சங்கியாக்க முயல்கிறார். ரவீந்திரன் துரைசாமி என்கிற RSS காரருடன் நெருங்கி நட்பில் இருக்கிறார். அடுத்த நாள், சங்கியா நான்? என்கிறார். விஜயை ஆதரித்து வருகிறார்; அடுத்து அவரை எதிர்க்கிறார்.
சீமான் கருத்துக்காக மட்டுமல்ல நாங்கள் களத்தில் வேலைபார்ப்பதால் தான் வாக்குகள் கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் சீமான் ஒவ்வொரு மாதிரியாக பேசுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அவர் பேசும் அனைத்துக்கும் முட்டுகொடுத்து கொண்டே தான் இருக்கிறோம். தொடர்ந்து எவ்வளவு நாள் தான் அடிமையாக இருக்க முடியும்.
சீமானை செய்வினை பொம்மையை போல் செயல்படுத்துகின்றனர். எங்களை கோமாளிகளாக்குகின்றனர். எனவேதான் சுமார் 50 பேர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்" என்றார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!