Tamilnadu
“பழனிசாமி விமர்சித்தால், இந்த அரசு பணிகளை சரியாக செய்கிறது என்று அர்த்தம்” - ஆர்.எஸ்.பாரதி !
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக சட்டதிட்ட திருத்தக் குழு அணி சார்பில், சென்னை தண்டையார்பேட்டை ரெட்டை குழி தெருவில் அமைந்துள்ள பார்வையற்றோர் இல்லத்தில் பார்வையற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது வருமாறு :
1968 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பார்வையற்றோர் இல்லத்தில் தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி விமர்சையாக கொண்டாடப்பட்டது. பார்வையற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு என்ன தேவை இருப்பின் அதை பூர்த்தி செய்துள்ளோம்.
இந்த புயலில் சென்னையை பொருத்தமட்டில் 24X7 பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்த அரசு. உங்கள் பொறுப்புக்கே விட்டு விடுகிறோம் நான்காம் தூண் (ஊடகம்) எந்த அளவுக்கு விமர்சையாக செய்திகள் வெளி வந்திருக்கிறது என்று பாருங்கள். இதுவரையில் சென்னை மாநகரத்தில் இவ்வளவு பெரும் மழையை ஒரு மணி நேரத்திற்குள்ளாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது இந்த ஆட்சிதான்.
நான் வசிக்கக்கூடிய ஆலந்தூர் பகுதியில் ஒரு மரம் விழுந்தது. என் வீட்டினருக்கே விழுந்ததால் உடனே அகற்றி விட்டார்கள் என்று நீங்கள் கூறலாம். ஆனால் நான் அந்த பகுதியில் நகர மன்ற தலைவராக இருந்திருக்கிறேன். இதுவரையில் ஒரு மணி நேரத்திற்குள் அதை அகற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வந்ததே இல்லை. ஆனால் தற்போது 15 நிமிடத்தில் அகற்றப்பட்டு விட்டது. அந்த அளவிற்கு தற்போதைய ஆட்சி துரித முறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்த அரசு மிகவும் கடமைப்பட்டுள்ளது. அரசுக்கு எந்த கலகமும் வந்து விடக்கூடாது என்பதற்காக உயிர் பொருள் ஆவி அனைத்தையும் பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் என்கிற முறையில் நிவாரண பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் மனதார பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றியதால் அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு தெரியும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திராவிட மாடல் அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், நாங்கள் (இந்த அரசு) பணிகளை சரியாக செய்கிறோம் என்று அர்த்தம்.” என்றார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!