Tamilnadu
“Blockchain தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும்” - அமைச்சர் PTR !
அரசு ஆளுகையில் மின்னணு வாயிலாக நிர்வாகத்தினை ஊக்குவிப்பதற்கான "பிளாக்செயின் தொழில்நுட்ப பயிலரங்கம்" தமிழ்நாடு மாநில திட்டக் குழு நேற்று (நவ.19) அன்று நடத்தியது.
சென்னை, தமிழ்நாடு, நவம்பர் 19, 2024 - "பிளாக்செயின் தொழில்நுட்பம்" - தமிழ்நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் நிர்வாகத்தை மாற்றியமைத்தல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில திட்டக் குழு, ஆளுகைக்கான புத்தாக்க மையம் (CIG), தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கம் (StartupTN), தமிழ்நாடு தொழில் நுட்ப புத்தாக்க மையம் (iTNT Hub), மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் (NASSCOM) மற்றும் பிளாக்செயின் & வெப் 3 அசோசியேஷன் (BWA) ஆகியவற்றுடன் இணைந்து இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இப்பயிலரங்கை, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். "பிளாக்செயின் தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கும் எனவும், நிதி சேவைகள் மற்றும் அதன் வழங்கல் நடமுறைகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் புதுமை மற்றும் மின்னணு (டிஜிட்டல்) வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு பிளாக்செயின் தொழில்நுட்பக் கொள்கை போன்ற முன்னோக்கு கொள்கைகள் தொடர்பாகவும் அவர் விவரித்தார்.
அமைச்சர் அவர்களின் உரையைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் தொடக்க உரையை நிகழ்த்தினார். மாநிலத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசின் நல்ஆளுகைக்காக பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்பான தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார்.
தொடக்க அமர்வில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், இ.ஆ.ப, மருத்துவர் எழிலன் நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினர், சுதா, எஸ், இவப., மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துறைசார் வல்லுநர்கள் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட தொடர் அமர்வுகள் மற்றும் விவாதங்களுடன் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுனிதா வர்மா அவர்கள், பிளாக்செயின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் ஒழுங்குமுறையை வழிநடத்துவது குறித்து காணொளி வாயிலாக சிறப்புரையாற்றினார். புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் பிளாக்செயின் கொள்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதல் குறித்தும் விவரித்தார்.
பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகள் மற்றும் விவாதங்கள் இப்பயிலரங்கில் இடம்பெற்றன. மேலும், இப்பயிலரங்கில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதி சேவைகள் அதன் வழங்கல் மற்றும் பொது துறை வழங்கலில் பயன்படுத்துதல் குறித்த ஆழ்ந்த புரிதலை வழங்கியது.
அடுத்தடுத்த அமர்வுகளில், இந்தியாவில் பிளாக்செயின் தொழில்நுட்பம் ஒழுங்குமுறைகள் மூலம் புத்தாக்க மேம்பாடு, அதன் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும், பொதுத் துறை நிறுவனங்களில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த சாத்திய கூறுகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.
மேலும், புதிய நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உகந்த சூழல் குறித்தும், இத்தொழில்நுட்ப பயன்பாட்டின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பாக நிபுணர் குழு விவாதங்கள் நடைப்பெற்றன.
பிளாக் செயின் தொழில்நுட்பத்தை அமல்படுத்துதல், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சி, அரசின் முன்னுரிமைகள், தொழில்துறை உட்கட்டமைப்பில் உள்ள சவால்கள் மற்றும் அதனை நெறிமுறை படுத்துதல் உள்ளடக்கிய தொலைநோக்கு கொள்கை தொடர்பாக விவாதித்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!