Tamilnadu
”மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ அதுபோல் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது” : சு.வெங்கடேசன் MP ஆவேசம்!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவிமயமாக்கி, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இவர்களுக்கு சேவகம் செய்து வரும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி எப்படியாவது திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசிவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் திருவள்ளுவர் தினத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவரின் படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது, இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், காவியுடை அணிந்து, பூணூல் போட்டு அமர்ந்துள்ள “வள்ளுவர்” படம் அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ”வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது. மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்" என சமூகவலைதளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !