Tamilnadu
“கிண்டி மருத்துவமனை மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 13) காலை மருத்துவர் பாலாஜி என்பவரை விக்னேஷ் என்ற நபர் கத்தியால் குத்தினார். அதனையடுத்து, சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய வழக்கில் கிண்டி காவல்துறை விக்னேஷை கைது செய்து, 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 14) காலை சென்னை கிண்டி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சையில் உள்ள மருத்துவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது மருத்துவர் பாலாஜி நலமாக அமர்ந்து, அமைச்சருடனும் சக மருத்துவர்களுடனும் உரையாடுவது போன்ற காணொளிகள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இளைஞரின் தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி நலமுடன் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதை, தம் கடமையாக கொண்டு செயல்படும் அரசாக திராவிட மாடல் அரசு அமைந்துள்ளது என்று, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய நாள் (நவம்பர் 13) உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!