Tamilnadu
இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக திகழும் ’நான் முதல்வன்’ : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைததார்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 14 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,”நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 38,80,933 மாணவர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களை வழங்கி, ஆண்டுதோறும் 14 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது மாணவர்கள் வெற்றிகரமாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இத்திட்டத்தில் திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டின் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதையும்,உயர்மட்டதொழில் வாய்ப்புகளுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டது தான் நான் முதல்வன் திட்டம் .
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் கீழ் இதுவரை 3,50,000 பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் பணியமர்த்தப்பட தயாராக உள்ளனர். இதுவரை, 2022 முதல் 91,234 பொறியியல் மாணவர்கள், 1,18,685 கலை & அறிவியல் மாணவர்கள், மொத்தம் 2,51,958 மாணவர்கள் (பாலிடெக்னிக்குகள் & ஐடிஐகள் உட்பட) வெற்றி பெற்றுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!