Tamilnadu
சென்னை பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி : மாநகராட்சியின் அசத்தலான திட்டம் என்ன?
தமிழ்நாடு மக்கள்தொகையில் 48%க்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அந்த அளவுக்கு நகர்ப்புறங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதே நேரத்தில் பணி சுமை மற்றும் பணி சூழல் காரணமாக பெரும்பாலானோரால் காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. கட்டுடலை உருவாக்க ஆர்வம் உள்ள ஏழை இளைஞர்களுக்கு, தனியார் உடற்பயிற்சி கூடங்களின் கட்டணங்கள் எட்டாக்கனியாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 198 உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மகளிருக்கும் உடற்பயிற் கூடங்கள் அமைக்க வேண்டும் என பெண் மாநகராட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 8 மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ”உடல் ஆரோக்கியத்தில் தற்போது மகளிருக்கு அதிக விழிப்புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் மகளிர் உடற்பயிற்சி கூடங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி, திரு.வி.க.நகர் மண்டலம், 68-வது வார்டு ஜவகர் நகரில் ரூ.42.20 லட்சத்திலும், கோடம்பாக்கம் மண்டலம், 128-வது வார்டு இளங்கோநகர் சாலையில் ரூ.36.97 லட்சத்திலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 80, 81, 82, 85, 87, 195 ஆகிய வார்டுகளிலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உடற்பயிற்சி கூடமும் 46 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ட்ரெட் மில் உள்ளிட்ட நவீன உபகரணங்களும் இடம்பெற உள்ளன" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!