Tamilnadu
”அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்க நான்தயார்” : பழனிசாமிக்கு சவால் விட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் Champions Kit தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், Back Pack, Thermal Flask, Towel, Cap, Smart Watch உள்ளிட்ட 8 பொருட்களைக் கொண்ட Champions Kit-ஐ 2600 மாணவர்களுக்கு வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, நம்முடைய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) விடுதிகள் அனைத்து வசதிகளுடன் திறம்பட செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அங்கு தங்கி பயிலும் மாணவர்கள் சர்வதேச - தேசிய அளவிலானப் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறார்கள். இந்த Champions Kit தொகுப்பு நம் விளையாட்டு விடுதியைச் சேர்ந்த மாணவர்களின் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”அரசின் திட்டங்கள் குறித்து குறை கூறும் எடப்பாடி பழனிச்சாமியுடன் தான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அரசின் திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை வைப்பதில் தவறில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!