Tamilnadu
தமிழ்நாட்டில் 99.9 விழுக்காடு தொகுதிகளில் ஆய்வு நிறைவு! : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சாதனை!
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 233ஆவது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் ரவி அவர்களின் அரக்கோணம் தொகுதியில் மேற்கொண்டார்.
அவ்வகையில், அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
அதன் பிறகு, பள்ளி மாணவர்களின் திறமைகள் வியக்க வைப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர், பள்ளியில் காலியாக உள்ள இடத்தை தூய்மை செய்து வைக்கும்படியும் அறிவுறுத்தினார்.
தூய்மை செய்தால் மாணவர்கள் விளையாடுவதற்கு உதவியாக இருக்குமென தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து விரைவில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இப்பள்ளி ஆய்வின் போது காலை உணவுத் திட்டம் குறித்து தானாக முன்வந்து பேசிய மாணவரையும், கலைத்திருவிழா போட்டிக்காக வேடமணிந்து திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். சிறப்புக் குழந்தை மாணவர் பரத்தின் ஓவியத் திறமையைக் கண்டு பாராட்டுகள் தெரிவித்தார்.
Also Read
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
தீபாவளி போனஸ் : கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு அறிவித்த தமிழ்நாடு அரசு!