Tamilnadu
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
கடந்த 2022 - 23ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பக்தர்கள் ஆன்மீகப் பயணமக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும், இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 2022 - 23ம் ஆண்டில் 200 நபர்களும், 2023 - 24ம் ஆண்டு 300 நபர்களும் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டான 2024 - 25ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு :
“ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் செல்ல தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
* விண்ணப்பிக்கும் நபர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும்.
* மேலும் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
* விண்ணப்பப் படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
* இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
* விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்
- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்மீகப் பயணமானது ராமேஸ்வரத்தில் தொடங்கி காசிக்கு சென்று பின்னர் காசியில் இருந்து ராமேஸ்வரத்தை வந்தடைகிறது."
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!