Tamilnadu
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதி அளித்து ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகள், ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி பாதுகாக்கப்படும் என அப்போதைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை செயல்படுத்தும் வகையில் தற்போது ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி (சிற்றாமைகள்) மற்றும் பச்சை ஆமைகள் வருகை தருகின்றன.
ஆமைகளை பாதுகாக்கும் நோக்கில் உள்ளூர் மீனவ தன்னார்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை உள்ளடக்கிய ஆமை பாதுகாவலர் குழுக்கள் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளை பாதுகாப்பதற்கும், ஆமை குஞ்சுகளை மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்ப உதவும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை : அதிர்ச்சியளித்த ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
மூத்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு: உருக்கமுடன் முதலமைச்சர் இரங்கல்!
-
கடல் ஆமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை... தமிழ்நாடு அரசின் புதுமுயற்சி - ஆமை விலக்கு சாதனங்கள் பற்றி தெரியுமா?
-
ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் T20 போட்டி - நியூசிலாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்யுமா இந்தியா ?
-
“தி.மு.க தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்” : கனிமொழி எம்.பி பேச்சு!