Tamilnadu
கடந்த ஆண்டை விட தீபாவளி விற்பனை ரூ.10 கோடி அதிகம் : சாதனை படைக்கும் ஆவின் நிர்வாகம் !
தீபாவளியை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் இனிப்பு மற்றும் கார வகைகலின் விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகியுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாட்டின் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள், சுமார் 4.5 இலட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை இணையம் மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களைத் தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் ஆவின் நிறுவனம் கிராம அளவில் உள்ள இலட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை பெரிய அளவில் மேம்படுத்த உதவுகிறது.
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களிடையே இவ்வகையான சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை தற்போது வரை சுமார் ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!