Tamilnadu
தீபாவளிக்கு முந்தைய நாள் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை : தமிழ்நாடு அரசு உத்தரவு !
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் இடத்தில இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
இப்படி சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான நவம்பர் 1-ம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருத்தனர்.
இந்த நிலையில், தீபாவளிக்கு முந்தைய நாளன்று (30.10.2024) பிற்பகல் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அரைநாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சொந்த ஊர் செல்லும் மாணவர்களின் வசதிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!