Tamilnadu
தீபஒளி தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவு! : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபஒளி தீக்காய சிறப்பு உள் நோயாளிகள் பிரிவை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒவ்வொரு ஆண்டும் தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கி வைப்பது என்பது வழக்கம், அந்த வகையில் இன்று தீபஒளி தீக்காய சிறப்பு நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு 12 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், பெண்களுக்கு 8 படுக்கைகளுடன் ஒரு பிரிவும், குழந்தைகளுக்கு ஐந்து படுகைகளுடன் ஒரு பிரிவும் என 25 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
தீக்காய சிகிச்சைக்காக அண்டை மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள், ஆண்டுதோறும் 2 ஆயிரம் என்ற அளவுக்கு தீக்காய நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள், முதலமைச்சர் வழிகாட்டுதலோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தீபஒளி நேரங்களில் பட்டாசு வெடித்து ஏற்படும் பாதிப்பு என்பது தொடர்ச்சியாக குறைந்து இருக்கிறது, இந்தாண்டும் இரண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
குழந்தைகள், நோயாளிகள், வயதான முதியவர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது, செல்லப் பிராணிகள் அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது, பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்த கூடாது, வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பிரித்துப் பார்க்கக் கூடாது, கால் சட்டை பையில் பட்டாசுகளை வெடித்துக்கொண்டு மற்றொரு பட்டாசுகளை வெடிக்க கூடாது, சாதாரண குப்பைகளில் பட்டாசுகளை வெடித்து போடக்கூடாது.
பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்த வேண்டும். குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது, பட்டாசு வெடிக்கும் பொழுது அருகில் ஒரு வாலியில் தண்ணீரை வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும், இளைஞர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது செல்பி எடுக்க கூடாது.
கடந்த மூன்று ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் உயிரிழப்புகள் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!