Tamilnadu
அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வத்தின் திருவுருவப் படம் திறப்பு!
எழுத்தாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் அக.10 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மலக்க முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையினரும் முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் முரசொலி செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்தார். அமைச்சர் துரைமுருகன், இந்து என்.ராம், நடிகர் சத்தியராஜ், பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் புகழுரையாற்றுகிறார்கள்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !