Tamilnadu
பால் தடையின்றி கிடைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு !
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவில் இருந்தே சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையை முன்னிட்டு அத்தியாவசிய பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு பால் தடையின்றி கிடைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் தரப்பில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் அரை கிலோ பால் பவுடர் 4000 பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் 50,000 அரை லிட்டர் பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூர் பால்பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் 9000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!