Tamilnadu
82 ஆண்டு பழமையான மெரினா நீச்சல் குளம்! : புதுப்பிக்கப்பட்டு நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது!
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள மாநகராட்சி சொந்தமான நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து திறந்து வைத்தார்.
மெரினா நீச்சல் குளமானது 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இந்த நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சில ஆண்டுகளாக தனியார் மூலம் பராமரிப்பு பணிக்காக விடப்பட்ட இந்த நீச்சல் குளம், தற்போது ஒரு கொடியை 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது.
நீச்சல் குளத்தின் சுற்றியுள்ள நடைபாதை சீரமைத்து, சுவர்களில் வண்ணம் பூசி, நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் கோடுகள் உள்ளிட்டவை பராமரிப்பு செய்யப்பட்டு, பொதுமக்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குளத்தை சுற்றியுள்ள சுவரில் வண்ணம் ஓவியம் வரைந்து அழகுப்படுத்தி குளியல் அறை ஒப்பனை அறை அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் புனரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது
சுமார் நூறு மீட்டர் நீளமுள்ள இந்த நீச்சல் குளம் 30 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. நீச்சல் குளத்தின் ஆழமானது 3.5 அடியும், அதிக அளவாக 5 அடியும் உயரம் கொண்டது. பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்காக புறணிக்கப்பட்ட இந்த நீச்சல் குளம் நாள்தோறும் திறக்கக்கூடிய நேரம் காலை 5.30 முதல் மாலை 7.30 வரை நாள்தோறும் செயல்படும் என்றும், காலை 8:30 மணி முதல் 9.30 மணி வரை பெண்களுக்கான நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான க்யூ ஆர் கோட் வசதியை இன்று விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குறிப்பாக நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 50-ம், ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு 10% சிறப்பு சலுகையான தள்ளுபடி விதிக்கப்பட்டு ரூ. 45-ம், அதே போல 12 வயது முதல் 14 வயது வரையில் உள்ள சிறியவர்களுக்கு ரூ. 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நீச்சல் குளம் நாளை (அக்டோபர் 9) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!