Tamilnadu
இன்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் பவள விழா பொதுக்கூட்டம் : விழாக் கோலம் பூண்ட காஞ்சிபுரம் !
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில், இன்று மாலை நடைபெறும் தி.மு.கழக பவள விழாவில் தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். தி.மு.கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்ட மான மேடை பந்தல் அமைத்து மிகவும் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொள்கை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பதால் அண்ணன் பிறந்த காஞ்சிபுரம் மாநகரமே கழகத் கொடி தோரணங்களுடன் விழாக் கோலம் பூண்டுள்ளது.
தி.மு.கழக பவள விழாவையொட்டி தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கும் மாபெரும் பொதுக் கூட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாநகரில் - அண்ணா பயின்ற பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு திடலில் இன்று (26--ஆம் தேதி) மாலை 5.00 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த மாநாடு கழக பொதுச் செயலாளர் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலும், அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெறுகிறது. இம்மாபெரும் பொதுக் கூட்டத்தில் கழக தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
திராவிட கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ., மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மனிய நேயம் மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல்ராஜன், மனிய நேய ஜனநாயக்கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை கட்சி தலைவர் அதியமான், தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், பார்வார்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் பி.என்.அம்மாவாசி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்கள்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தி.மு.கழக பவள விழா மாபெரும் பொதுக் கூட்டம் அண்ணன் பிறந்த காஞ்சி மண்ணில் - பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு திடலில், பார்ப்போர் பிரமிக்கும் வகையில் பிரம்மாண்டமான மேடை, ராட்சத பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக, இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
மழை பெய்தால் கூட இப்பொதுக் கூட்டம் தடைபடாமல் நடப்பதற்கு வசதியாக மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொதுக் கூட்ட பந்தலுக்குள் இரவை பகலாக்கும் வகையில் வெள்ளை நிற ஹாலோஜன் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது. இப்பொது கூட்ட பந்தலுக்குள் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்மாபெரும் பொதுக் கூட்டத்தை மாநாடு போல நடத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!