Tamilnadu
”ஓங்குக திராவிட மாடல் ஆட்சி” : AI மூலம் தி.மு.க முப்பெரும் விழாவை வாழ்த்திய முத்தமிழறிஞர் கலைஞர்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1985 - ஆம் ஆண்டு முதல் தி.மு.கவில் “முப்பெரும் விழா’’ அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள் செப்.17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்.15, பிறந்த நாளையும், தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட 17. 9. 1949 தினத்தையும் இணைத்து “முப்பெரும் விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் சேர்த்து, தி.மு.க தோன்றி 75 ஆண்டு பவளவிழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.
முன்னதாக AI மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் தி.மு.க முப்பெரும் விழாவை வாழ்த்தி பேசினார். பவளவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினார்.
அந்த உரையில், ”கழக களப்பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் மு.க.ஸ்டாலின். திராவிடச் செம்மலாய் இந்தியாவின் முன்மாதிரி முதலமைச்சராக செயல்பட்டு நல்லுலகம்போற்றும் நாயகராய் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி வழியில் கழக ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின்.
இனமானம், மொழி மானம், சுயமரியாதையை காக்கும் மு.க.ஸ்டாலின் கடமை உணர்வை கண்டு நான் வாழ்த்துகின்,பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணா புகழ். ஓங்குக திராவிட மாடல் ஆட்சி” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இதற்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் : ஒன்றிய அரசின் பதில் மூலம் வெளிவந்த உண்மை!
-
மன்னிப்பு கேள் : எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு!
-
வேளாண்மை – உழவர் நலத் துறை : 169 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?” - அமைச்சர் மா.சு. கண்டனம்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் - யார் இந்த சுதர்சன் ரெட்டி?