Tamilnadu
வெள்ளத்தடுப்பு பணிகளை 20 நாளில் முடிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்!
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் பருவமழைக்கு முந்தைய முன்னேற்பாட்டு பணிகளாக ரூ.38.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளான வீராங்கல்ஓடை, ஓட்டேரிநல்லா, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, கூவம் மற்றும் அடையாறு போன்றவற்றில் உள்ள மிதக்கும் தாவரங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றினை இயந்திரங்களை பயன்படுத்தி அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் வருகிற 30.09.2024-க்குள் முடிக்குமாறும் மேலும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளாக ரூ.590 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு, முக்கிய பகுதிகளான தணிகாச்சலம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், மாதவரம் ரெட்டேரி மற்றும் கெருகம்பாக்கம் கால்வாய் போன்றவற்றில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் வருகிற 30.09.2024-க்குள் முடிக்குமாறு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேவையான மணல் மூட்டைகள், காலி கோணிகள் மற்றும் சவுக்கு கம்புகள் ஆகியவற்றை பருவமழையினை எதிர்கொள்ள ஏதுவாக ஆங்காங்கே போதுமான இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!