Tamilnadu
சென்னையில் திமுக முப்பெரும் விழா: பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருது பெறுவோர் விவரம்!
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பவள விழா ஆண்டு "முப்பெரும் விழா" நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தி.மு.க பவள விழா ஆண்டு, தி.மு.க முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டு தோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர் பெயர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் :
பெரியார் விருது - பாப்பம்மாள்
அண்ணா விருது - அறந்தாங்கி மிசா இராமநாதன்
கலைஞர் விருது - எஸ். ஜெகத்ரட்சகன்
பாவேந்தர் விருது - தமிழ்தாசன்
பேராசிரியர் விருது - வி.பி. இராஜன்
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!