Tamilnadu
அத்துமீறிய பேச்சு... நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது SC, ST பிரிவின் கீழ் வழக்கு !
கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் youtube பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசையும் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞரையும் அவதூறு பரப்புவிதமாக பேசினார். மேலும் குறிப்பிட்ட ஒரு இழிவுபடுத்தும் வகையிலும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
இந்த இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியுடன் மாநில ஆணையம் விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிநர் மாநில ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது SC, ST பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!