Tamilnadu
”கலைஞரிடம் இருந்து இதை கற்றுக்கொள்ளுங்கள்” : இளைஞர்களுக்கு வேண்டுகோள் வைத்த கனிமொழி எம்.பி!
தமிழியக்கம் - வி.ஐ.டி பல்கலைக் கழகம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பேசிய கனிமொழி,”கலைஞர் எப்போதும் மன சோர்வாக இருந்ததே கிடையாது. எந்த ஒரு விஷயத்தையும் இதுதோடு முடிந்துவிட்டது என்று அவர் ஒரு நாளும் எண்ணியது கிடையாது. அடுத்து என்ன என்றுதான் எப்போதும் நினைத்து கொண்டே இருப்பார். இன்றைய இளைஞர்கள் இதைத்தான் கலைஞரிடம் இருந்து Inspiration-ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆட்சியைப் பிடிக்காத நேரத்தில் கூட தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு, வெற்றிப் பெற்றவர்களுக்கு முன்பாகவே நன்றி கூட்டங்களை நடத்தியவர்தான் கலைஞர். கலைஞர் இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டபோது கூட போராட்ட குணத்துடன், “வா பாத்துக்கலாம்” என எதிர்கொண்ட ஒரு தலைவனுக்குத்தான் இன்று நாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். கலைஞரின் வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்தது. பள்ளியில் சேருவது தொடங்கி, மறைந்த பிறகும் கூட அவரது உடல் எந்த இடத்தில் புதைக்க வேண்டும் என்று போராட்டங்களாகவே இருந்தன.
'உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்'. ஒன்றிய அரசிடம் தேவை, அவசியம், நியாயம் என்று இருக்கும் வரை கை கொடுப்போம். இதை மீறினால் உறவை முறித்துக் கொண்டு குரல் கொடுத்த ஒரு தலைவன் இருந்தார் என்றால் முத்தமிழறிஞர் கலைஞர்தான்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !