Tamilnadu
”குஷ்புவை முதலில் எனது பதிவை பார்க்க சொல்லுங்கள்” : கனிமொழி MP பதிலடி!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்த கொடூர சம்பவத்திற்கு தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி MP கண்டனம் தெரிவித்து இருந்தார். அதில் ”பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நாட்டையே ஆதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்தியாவில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் இவரது கண்டனத்தை பார்க்காமலும், தெரிந்துகொள்ளாமலும் பா.ஜ.க நிர்வாகி குஷ்பு கனிமொழி எம்.பியை விமர்சித்துள்ளார். இதற்கு கனிமொழி எம்.பி, மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு சமூகவலைதளத்தில் எனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறேன். குஷ்புவை முதலில் எனது பதிவை பார்க்க சொல்லுங்கள். பிறகு பேச சொல்லுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!