Tamilnadu
“நாடாளுமன்றத் தேர்தல் 2024 - 40க்கு 40 தென் திசையின் தீர்ப்பு” - முதலமைச்சரின் தேர்தல் ஆவண நூல் வெளியீடு!
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்
இக்கூட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 40க்கு 40 என தமிழ்நாடு, புதுச்சேரியின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை தழுவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய, “நாடாளுமன்றத் தேர்தல் 2024 - 40க்கு 40 தென் திசையின் தீர்ப்பு” என்கிற தேர்தல் ஆவண நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். இந்நூலில், 2024 மக்களவை தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை தி.மு.க கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது? என்பது குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, 2023-ல் இந்தியா கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில் நடந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா குறித்தும், இந்நூலில் விரிவாக பதிவிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் Infograph என அனைத்தும், இந்நூளில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மோன்தா புயல் : சென்னை - ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து!
-
சென்னையில் விடிய விடிய மழை! : நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீராய்வு!
-
“வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மருத்துவ திட்டங்களால் மக்களை பாதுகாத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !