Tamilnadu
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து : அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு !
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாட்டின் 78-வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு ஆளுநருடன் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே என் நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்,பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!