Tamilnadu
ராமர் பாதம் கொண்டு செல்லும் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதை கொண்டாடும் வகையில், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கருப்பராயன் திருக்கோவிலில், ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பாதங்களை ராமேஸ்வரம் வரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்த பின்பு, அயோத்திக்கு ரயில் மூலம் அயோத்திக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன் தொடக்க நிகழ்வில் இந்து மகா சபா மாநில நிர்வாகிகள் பங்கேற்பதாக உள்ளதாகவும், ஆனால் தொடக்க விழா மற்றும் வாகன ஊர்வலத்திற்கு காவல்துறை
அனுமதி மறுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இதன் தொடக்க விழாவிற்கும் வாகன ஊர்வலத்திற்கும் அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார்,மனுதாரர் ஏற்கனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டினார். மேலும் அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் எனவே இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, தொடக்க நிகழ்வு மற்றும் வாகன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என்று மறுத்துவிட்டார். மனுதாரர் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வதியோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்ய முடியாது என்று உத்தரவிட்டு வழக்கு முடித்து வைத்துள்ளார்.
Also Read
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்
-
“தமிழுக்காக ஒன்றிய அரசு செலவு செய்த தொகை எவ்வளவு?” - தயாநிதி மாறன் எம்.பி. சரமாரி கேள்வி!
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!