Tamilnadu
அதிவேகமாக வந்த கார் : நெடுஞ்சாலையில் தம்பதிக்கு நேர்ந்த துயர சம்பவம்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பனியன் கம்பனியில் வேலைபார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு கோகுலகிருஷ்ணன் மற்றும் தீபன்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஊத்துக்குளி அருகே கருணாம்பதி பகுதியில் சிவக்குமார் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று இரவு மனைவியுடன் கருணாம்பதியில் வீட்டு வேலைகளைப் பார்க்கச் சென்ற சிவக்குமார் அங்கேயே தங்கி விட்டு, இன்று காலை இருசக்கர வாகனத்தில் மனைவி லதாவுடன், புதுப்பாளையம் நோக்கி வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் அவிநாசி - மங்கலம் நெடுஞ்சாலை சாலை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்புறம் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார் தம்பதியர் சடலங்களை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!