Tamilnadu
“முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுவிட்டு பேசட்டும்” - சீமான் மீது செல்வப்பெருந்தகை பாய்ச்சல் !
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆடைகள்,உணவு பொருட்கள் உள்ளிட்ட 15 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தாகை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை பேசுகையில், ”15 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வயநாடு பகுதிக்கு அனுப்புவதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 8 ஆம் தேதி 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கவுள்ளோம். பிரதமர் வயநாடு சென்றால்தான் அதிசயம், அவர் அங்கு செல்லாமல் இருப்பதுதான் எதார்த்தம்.
மணிப்பூருக்கு பிரதமர் இதுவரை சென்று பார்க்கவில்லை, ஆனால் ராகுல்காந்தி எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று பார்க்கிறார். வீடுகளை கட்டி தருவோம் என்று சொல்கிறார். ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?. ஒன்றிய அரசின் கட்டுபாட்டில்தான் கேரளா உள்ளது. தமிழ்நாடு, கேரளாவை பாஜகவுக்கு பிடிக்காது. ஆனால் ஆட்சிக்கு முட்டு கொடுப்பதால், ஆந்திராவை மட்டும் பிரதமருக்கு பிடிக்கும். அவர்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவார்கள்.
அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இது போன்ற பேரிடர் சமயத்தில் உதவி செய்ய முன்வர வேண்டும். குற்றம் சொல்வது, வழக்கு போடுவது, மிரட்டுவதில்தான் பலர் முனைப்புடன் இருக்கிறார்கள். இது போன்ற விசயங்களுக்கு முன்வருவதில்லை. வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல்காந்தி, முறையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை என சீமான் விமர்சனம் செய்திருப்பது அபத்தமானது.
எதுவும் செய்யாமலா 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் ராகுல் காந்தியை வெற்றி பெற வைத்தார்கள்? சீமான் ஒரு தலைவர்தானே, எங்காவது தேர்தலில் நின்று வெற்றிபெற்றுள்ளாரா? அவர் வெற்றிபெற்று விட்டு பேசட்டும்." என்றார்.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!