Tamilnadu
”ஏழை எளிய மக்களுக்காக உழைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம்!
சென்னை, கொளத்தூர், எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2022ஆம் ஆண்டில் 480 மாணவர்களுக்கும், 2023 ஆம் ஆண்டில் 685 மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கினார்.
இதற்கு முன்னதாக இந்நிகழ்வில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ”தமிழ்நாட்டில் உள்ள மாணவக் கண்மணிகளே.. உழைப்புக்கு வடிவமாய் தலைமைப்பண்புக்கே எடுத்துக்காட்டாய் திகழும் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உங்கள் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தது எல்லாம் ஏழை மக்களின் உயிர்துடிப்புதான். சதாசர்வகாலமும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். கோவில் என்பது அன்னசத்திரத்தற்கு மட்டுமல்ல அறிவு ஆலயத்திற்கும் தான் என மாற்றிக்காட்டியவர். அறிவாலயத்திலிருந்து புறப்பட்ட நம் முதலமைச்சர். அதனால்தான் அவர் மனிதநேயமிக்க மக்கள் முதல்வராக திகழ்கிறார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!