Tamilnadu
I Phone-ஐ தொடர்ந்து I Pad : தமிழ்நாட்டில் தயாரிக்க Foxconn நிறுவனம் முடிவு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
அதன்படி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Foxconn தொழிற்சாலையில் ஆப்பில் நிறுவனத்தின் I Phone தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், I Phone-களுடன், வரும் காலத்தில் I Pad-களையும் தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய Foxconn நிறுவனம் முடிவு செய்துள்ளது.இந்த முடிவுகளை அடுத்து Foxconn நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!