Tamilnadu
”நாடகம் நடத்துவது பழனிசாமிதான்” : அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென நடத்திய ஆய்வை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் நாடகம் நடத்துகிறார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன்,” தென்பெண்ணை ஆறு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தென்பெண்ணை ஆற்றுக்குஆணையம் அமைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.
கர்நாடக அரசு ஆணையம் அமைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளோம். காரணம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சி னைகள் தீர்ப்பது நல்லது. ஆனால் பிடிவாதக் காரர்களிடம் அது முடியாத காரியம். சுமார் 58 முறை பேசியிருக்கிறோம். அதன்பிறகு ஆணையம் அமைக்க கேட்டோம்.
அம்மா உணவகத்தில் முதலமைச்சர் நடத்திய திடீர் ஆய்வை நாடகம் என எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். எடப்பாடிதான் நாடகம் நடத்துவார். அவர்களது கட்சியில் மட்டும்தான் நாடகங்கள் நடக்கும்.
அறநிலையத்துறை இடத்தில் கடந்த ஆட்சியில் ரூ.198 கோடி கனிம வள கொள்ளை நடந்துள்ளது. கனிம வளக்கொள்ளை என்பது கடந்த ஆட்சியில் நடந்துள்ளது. அது தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!