Tamilnadu
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை : 8 பேரை கைது செய்தது தனிப்படை போலிஸ்!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, சம்பவத்தன்றும் அங்கு சென்று பார்வையிட்டு சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். பிறகு ரத்தக் காயத்துடன் இருந்த அவரை அங்கிருந்த நபர்கள் மீட்டு சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனும்தித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்னை வடக்கு மண்டல கூதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில், 10 அதிதீவிர தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ் மற்றும் அருள் ஆகிய 8 பேரை அதிதீவிர தனிப்படை போலீசார் கைது செய்ததுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?