Tamilnadu
“தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி” - பேரவையில் அமைச்சர் PTR-ன் அறிவிப்புகள் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், அமைச்சர்கள் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது துறைக்கான திட்டங்களை அறிவித்தார்.
அதன் பட்டியல் வருமாறு :
1) மின்ஆளுமை இயக்குநரகத்தில் தனித்தியங்கும் ஒழுங்குமுறை அமைப்பினை உருவாக்குதல்
2) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் நிறுவைனங்களை மறுசீரமைத்தல்
3) பெருங்குடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா/அலுவைக இடவசதி அமைத்தல்
4) புவிசார் கட்டமைப்பு உருவாக்கம்
5) ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs), அரசுக் கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு அதிவேக இணைய அலைக்கற்றை வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்குதல்
6) குறைந்த கட்டணத்தில் இணையத்தள தொலைக்காtசி சேவை கள் (IP TV) வழங்குதல்
7) தமிழ்நாடு ஆழ்நிலை தொழில்நுட்பக் கொள்கை (Tamil Nadu Deep Tech Policy) உருவாக்கம்
8) தமிழ்நாடு அறிவுசார் சொத்துரிமைக் கண்டுபிடிப்புகளின் மாநாட்டினை ஆண்டுதோறும் நடத்துதல்
9) அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் (Government ITIs) மற்றும் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Government Polytechnic Colleges) ஆகியவற்றுக்கு ICTACT நிறுவனம் வழங்கும் இலவச உறுப்பினர் சேவைகள்
10) ICTACT செயல்முறை ஆராய்ச்சி மையத்தை நிறுவுதல்
11) தமிழ்க் கற்ற – கற்பித்தல் செயல்பாடுகள் விரிவாக்கம்
12) கணித்தமிழ் தொடர் சொற்பொழிவு
13) மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு நடத்துதல்
14) மின்னூலக அச்சுப் பக்கங்களை எழுத்துணரி (OCR) முறையில் உரைவடிவிற்கு மாற்றுதல்
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !