Tamilnadu
துணி காய வைக்கும் போது தம்பதிக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேல்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி சரளா.
இந்நிலையில் நேற்று மனைவி சரளா வீட்டில் துணி துவைத்துள்ளார். பின்னர் இந்த துணிகளைக் கணவர் ராமு வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியில் காயவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனைப் பார்த்த, சரளா கணவரைக் காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர் அப்பகுதி மக்கள் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக வடபொன்பரப்பி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து கணவன் மனைவி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!