Tamilnadu
11 தொகுதிகளில் டெபாசிட் இழந்த பா.ஜ.க : தமிழ்நாடு திராவிட மண் என்பதை மீண்டும் நிரூபதித்த மக்கள்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணி புதுச்சேரி உள்ளிட்டு 40 தொகுதிகளில் போட்டியிட்டு 40க்கு 40 வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
தி.மு.க கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணிகள் படுதோல்வி அடைந்துள்ளன. மேலும் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.
குறிப்பாக நாங்கள்தான் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி என்று வாய் சவடால் விட்ட பா.ஜ.க 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ், சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி, கரூர் வேட்பாளர் செந்தில்நாதன், நாகப்பட்டினம் வேட்பாளர் ரமேஷ்கோவிந்த், நாமக்கல் வேட்பாளர் ராமலிங்கம், பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர், தஞ்சாவூர் வேட்பாளர் முருகானந்தம், திருப்பூர் வேட்பாளர் முருகானந்தம், திருவள்ளூர் வேட்பாளர் பாலகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் அசுவதாமன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகிய 11 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
அதேபோல் கோவை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 1 ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 312 வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!