Tamilnadu
12-ம் வகுப்புத் தேர்வில் சாதித்த ஒரே ஒரு திருநங்கை மாணவி... நேரில் சந்தித்து பாராட்டிய கனிமொழி எம்.பி !
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த மே 6-ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடிவில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவர்கள் (94.56%) தேர்ச்சி பெற்றனர். இதில் பொதுத் தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 பேர் (92%) தேர்ச்சி பெற்றனர்.
இந்த சூழலில் தேர்வெழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவியும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னை லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நிவேதா என்ற திருநங்கை மாணவி அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். பல்வேறு தடைகளையும், கேலி கிண்டல்களுக்கு மத்தியிலும் தனது முயற்சியால் 283 மதிப்பெண் பெற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
திருநங்கை மாணவியின் இந்த சாதனையை பலரும் பாராட்டினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமு கழக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, திருநங்கை மாணவி நிவேதாவை சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்திற்கு அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!