Tamilnadu
சவுக்கு சங்கர் மீது 8 வழக்கு.. மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் அடுத்தடுத்து புகார் - நடந்தது என்ன?
சவுக்கு மீடியா என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருபவர் சங்கர். இந்த பக்கத்தில் இவர் அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அண்மையில் பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். இதையடுத்து கோவை சைபர் க்ரைம் போலிஸார் சங்கர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இன்று தேனியிலிருந்த சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலிஸார் கைது செய்தனர். மேலும் சங்கர் மீது 294(b), 509, 353 உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு காவல்நிலையங்கள் சவுக்கு சங்கர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்றைய தினமும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 3 பெண் போலீசார் தனித்தனியாக புதிய புகார் அளித்துள்ளனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது தற்போது வரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள பெண் காவல் ஆய்வாளர், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள பெண் காவலர்கள் இருவர் என பெண் காவல் அதிகாரி உள்ளிட்ட மூன்று பெண் காவல்துறையினர் மகளிர் ஆணையத்தின் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கனவே குண்டர் சட்டம் உட்பட மூன்று வழக்குகள் சென்னை காவல்துறையிலும், திருச்சியில் ஒரு வழக்கும், தேனியில் இரண்டு வழக்கும், கோவையில் இரண்டு வழக்கு என 8 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாநில மகளிர் ஆனையத்தில் பெண்காவலர் மூன்று புகார் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!