Tamilnadu
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2023 - 2024 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி இன்று www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மற்றும் கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், இந்த முறையும் வழக்கம் போல் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வெழுதிய 7,60,606 மாணவர்களில் 7,19,196 (94.56 %) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%-மும், மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வெழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அரசுப்பள்ளிகள் 91.02% தேர்ச்சி பெற்றுள்ளது. அதே போல் அதிகளவாக கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் 6996 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த 2023-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.03% தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 0.53% தேர்ச்சி விகிதம் உயர்வு.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!