Tamilnadu

நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை : ஈரோடு மாவட்டத்தில் கொதிக்கும் வெப்பம் !

இந்தியாவில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மதியநேரத்தில் தேவையின்றி வெளியேசெல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நாட்டிலேயே மூன்றாவது அதிகபட்ச வெப்ப நிலை அளவு பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரோடு,வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 100 பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. அதன் உச்சமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று வெப்பநிலை 109.4° பதிவாகியுள்ளது. இது நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் இரண்டாவது அதிகபட்ச அளவு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று பகல்நேரத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில், அதிகபட்சமாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும், ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் 110.8° பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது.

Also Read: எதிர்க்கட்சிகள் தாக்கியதாக நாடகமாடிய பாஜக வேட்பாளர் : இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி... நடந்தது என்ன ?