Tamilnadu
தொடர்ச்சியாக தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை : காவல்துறையினருடன் வாக்குவாதம்!
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்னும் நான்கு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன் கோவை மக்களவை தொகுதிக்குட்ட ஆவாரம்பாளையத்தில் இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி மூலம் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அண்ணாமலை தொடர்ச்சியாக இரவு 10 மணிக்குமேல் பிரச்சாரம் மேற்கொள்வதை வாடிக்கையாக்கி வருகிறார். இந்நிலையில், கோவை காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்குமேல், பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைக் கண்ட காவல்துறையினர், அண்ணாமலையின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருடன் அண்ணாமலை வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
பின்னர், அங்கிருந்து வந்த அண்ணாமலை இருகூர் பிரிவில் பாஜகவினருடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து, காவல்துறையினருடன் வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், அண்ணாமலை மீது, தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இரண்டு பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!