Tamilnadu

”பாசிச பா.ஜ.க அரசை விரட்டி அடிப்போம்” : தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி பேச்சு!

தென்காசி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தென்காசி பேருந்து நிலையம் அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்பு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "10 வருடமாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் என்பதால் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறார்.

கல்வி உரிமை - மொழி உரிமை - நிதி உரிமை என நம் உரிமைகளை பறித்த பாசிசத அரசுதான் ஒன்றிய பா.ஜ.க அரசு. கடந்த 5 வருடத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால் இந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து வந்தாலும் கள்ளத்தனமாகக் கூட்டணி வைத்துள்ளது அதிமுக. இவர்கள் தேர்தல் முடிந்த உடன் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள். பிரதமர் மோடியை ஒருமுறை கூட எடப்பாடி பழனிசாமி விமர்சிக்காமல் இருப்பது ஏன்?

பாசிச மற்றும் அடிசை ஆட்சிக்கும் ஏப்.19 ஆம் தேதி நீங்கள் அளிக்கும் வாக்குதான் அவர்களுக்கான வேட்டு. தமிழ்நாட்டிற்கு வேட்டுவைத்த பிரதமர் மோடிக்கு நாம் திரும்பவும் வேட்டுவைக்க வேண்டும். அதற்கான தேர்தலாக இது அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Also Read: ”பா.ஜ.க ஆட்சியின் முடிவுக்கான Countdown தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!