Tamilnadu

’உங்களுக்கே என்றும் வெற்றி’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்ற தூத்துக்குடி மக்கள்!

கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். கம்புக்குக் களை வெட்டியாச்சு, தம்பிக்கும் பொண்ணு பாத்தாச்சு என்பது அந்தப் பழமொழி. அதுபோல, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.3.2024) காலையில் தூத்துக்குடி மாநகரில் நடைபயிற்சி மேற்கொண்டபடியே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் கனிமொழி அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியையும் சிறப்பாக மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் தொடங்கும் அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லோரும் சிறப்பாகத் தேர்வு எழுதி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியபடியே தூத்துக்குடி மாநகரில் காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற முதலமைச்சர் அவர்கள் அங்கு தம்மை எதிர்கொண்டு சந்தித்து வணக்கம் கூறிய மாணவ மாணவிகளிடம் நன்றாகப் படித்து எதிர்காலத்தில் நீங்கள் எல்லாம் சிறந்து விளங்கவேண்டும் என வாழ்த்தினார். அப்போது, அவர்கள், முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் இரண்டும் எங்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது. அதற்காக நன்றி என்று கூறி மகிழ்ந்தனர்.

அப்பொழுது முதல்வர்அவர்களைச் சந்தித்த மகளிர் குழுவினர் தாங்கள் செயல்படுத்தும் மகளிர் உரிமைத் திட்டம் எங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறது. நீங்கள் நல்லா இருக்கணும் என்று முதல்வரை வாழ்த்தினார்கள்.

அப்படியே மீனவ கிராமங்களில் சென்று நடைபயிற்சியோடு வாக்குச் சேகரித்தார் முதல்வர். அப்போது அன்போடு அவரை அழைத்த ஒரு மீனவர் இல்லத்திற்குச் சென்று அவர்கள் வழங்கிய தேநீரைப் பருகியபடியே மீனவர்களின் நலனுக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் நினைவுபடுத்தினார். அது கேட்டு மகிழ்ந்த மீனவர்கள் உங்களுடைய கடுமையான முயற்சியினால் நீங்கள் நடத்திவரும் சிறப்பான ஆட்சியினால் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். உங்களால்தான், புதுடில்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என்று உறுதிபடக் கூறினார்கள். அத்துடன் 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அதிமுகவுக்கும், எங்கள் தூத்துக்குடி பகுதி அடைந்த வெள்ளப் பாதிப்பிற்கு ஒரு பைசா கூட நிதி வழங்காமல் வாக்குக் கேட்க வருகின்ற பா.ஜ.க.வினருக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று கூறியது கேட்டு முதல்வரின் முகத்தில் புன்னகை அரும்பியது.

முதலமைச்சர் அவர்கள், அடுத்து தூத்துக்குடி காய்கறிச் சந்தைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டதும் அங்கிருந்த காய்கறி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கடையில் காலிபிளவர் விற்ற ஒரு மூதாட்டி மாண்புமிகு முதல்வர் அவர்களை வணங்கி உங்களுக்கே எங்கள் ஆதரவு என்றார். அப்படியே காய்கறி கடைகளை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துச் சென்ற முதலமைச்சர் அவர்களை வியாபாரிகள் எல்லாம் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வரவேற்றார்கள். ஒரு கடையில் இருந்த அத்தனைபேரும் சேர்ந்து முதலமைச்சர் அவர்களுடன் கைகுலுக்கியது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

வெண்டைக்காய் கடை, அங்கிருந்த பானிபூரி கடை, வெங்காயக் கடை முதலான பல்வேறு கடைகளுக்கும் சென்ற முதலமைச்சர் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்ற வியாபாரிகள். வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களைக் காட்டி, அவர்களுக்கே எங்கள் வாக்கு; உங்களுக்கே என்றும் வெற்றி என்று கூறி மகிழ்ந்தார்கள்.

குளச்சல் பகுதியில் பா.ஜ.க.வினரை துரத்தியடித்த மீனவ மக்கள். லயன்ஸ் டவுன் மீனவ குடியிருப்பில் மீனவர்கள் எல்லாம் திரண்டு நின்று முதலமைச்சர் அவர்களை வரவேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

Also Read: தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.466 கோடியை கொடுத்தது யார் ? பாஜகவின் ஊழலை மறைக்கும் SBI !